யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை !

Wednesday, June 29th, 2022

யாழ்ப்பணத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த 20 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச, அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவன தலைவர்களின் சிபாரிசிற்கு அமைவாக எரிபொருள் விநியோகம் தொடர்பான இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறிக்கப்பட்ட சில எரிபொருள் நிலையங்களில் ஜூலை 1 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை மாத்திரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இந்த நாட்களில் வழங்கப்பட மாட்டாது என்பதுடன் வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: