யாழ்ப்பாணத்தில் அதிபர் – ஆசிரியர் உட்பட 15 பேருக்கு கொரோனா!

Monday, April 5th, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமைநேற்று  ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 668 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் 15 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

மேலும் ஒருவர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் பணியாற்றுபவர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்.

யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியராகச் சேவையாற்றுபவர்கள் அடங்குகின்றனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related posts:


தமிழ் மக்களின் கல்வியின் காவலர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்ப...
பொதுப் போக்குவரத்து சேவையிலீபடும் ஊழியர்களது சுகாதார வசதிகளை மேம்படுத்த உடன் நடவடிக்கை – அதிகாரிகளுக...
மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் 4 மரணங்கள் 64 பேருக்கு கொரோனா - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்ப...