யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பம் காரணமாக 13 ஆயிரத்து 841 பேர் பாதிப்பு புள்ளிவிபரத் தகவலில் சுட்டிக்காட்டு!
Monday, October 17th, 2016
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்ட அதிக வெப்ப காலநிலை காரணமாக யாழ்.மாவட்டத்தில் 13 ஆயிரத்து 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தொடர்ச்சியாக வெப்ப காலநிலை நிலவி வருவதால் மக்கள் மற்றும் கால்நடைகள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றன. அந்த வகையில் யாழ்.மாவட்டத்தில் வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 28 கிராம சேவகர் பிரிவுகளிலும் 4ஆயிரத்த 260 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மிக முக்கியமாக நீர்த்தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ள காரணத்தால் அனர்த்த முகாமைத்தவ அமைச்சினால் மாவட்ட செயலகம் ஊடாக இவர்களுக்கான நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாவட்ட செயலகத்தில் தற்போத நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கு 3 பவுசர்களே உள்ளன என்றும் மக்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்குவதற்கு மேலும் 5 பவுசர்கள் தேவை என மாவட்ட செயலகத்தால் அமைச்சிடம் கோரப்பட்டுள்ளது. அத்துடன் நீர்விநியோகத்துக்க 3.5 மில்லியன் ரூபா தேவை எனவும் கோரப்பட்டு மக்களுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் தொடர்ச்சியாக வெப்ப காலநிலை நிலவுமேயானால் அடுத்தடுத்த பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட வரட்சி போன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதனால் வெப்ப காரணமாக மக்களின் வாழ்வாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது மிக முக்கியமானதொன்றாகும். அத்துடன் வெப்பநிலை தாங்காது பல பகுதிகளில் கால்நடைகள் இறப்பும் அதிகரித்து வரும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
Related posts:
|
|