யாழ்ப்பாணத்திலுள்ள சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்யத்திட்டம்!

Monday, November 21st, 2016

யாழ்.மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே உள்ள சுற்றுலா மையங்களை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் புதிய சுற்றுலா மையங்களை அடையாளம் கண்டு அவற்றையும் அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான நடவடிக்கைகளை சுற்றுலாத்துறை அமைச்சும் யாழ்.செயலகமும் இணைந்து ஆரம்பித்துள்ளன.

யாழ்குடாநாட்டுக்கு அண்மைக்காலமாகச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் இந்தப் புதியதிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் வேலணை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த செயற்றிட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

123

Related posts:

போதைப்பொருள் உபயோகப்படுத்தும் சாரதிகளை கண்டறிவதற்கான விசேட உபகரணம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் இவவருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக...
சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப...