யாழ்ப்பாணத்திலும் தாதியர்கள் போராட்டம்!

Thursday, June 3rd, 2021

யாழ் மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன் இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்..

நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்னர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை  தாதியர்களும்  இன்று காலையிலிருந்து அடையாள  பணிபுறக்கணிப்பில்  ஈடுபட்டுள்ளதோடு யாழ் போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: