யாழ்ப்பாணத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு – நாடுமுழுவதும் 19 பேர் அடையாளம் !

Thursday, July 15th, 2021

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் 19 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் டெல்டா திரிபுடன் கூடிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா திரிபு இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

00

Related posts: