யாழ்ப்பாணத்திலும் கொரோனா அச்சம் – சுய தனிமைப்படுத்தலில் புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த இரு குடும்பங்கள் – பொலிஸார் தகவல்!

Sunday, October 4th, 2020

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் பணியாற்றுவதாகவும், அவர்கள் தற்போது ஊர் திரும்பிய நிலையில் புங்குடுதீவில் சுகாதார நடவடிக்கைகளும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவ்விரு குடும்பத்தினரும் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக புங்குடுதீவு பொது சுகாதார உத்தியோகத்தர் அபிராஜ் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு 12 ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் பெண்கள் இருவர் மினுவாங்கொடையில் இருந்து கடந்த வாரம் ஒருவரும் நேற்றுமுன்தினம் மற்றொருவரும் புங்குடுதீவில் உள்ள தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அவர்கள் இருவரும் பேருந்துகளில் பயணம் செய்திருக்கின்றமையும் தெரியவந்துள்ளது. இதனிடையே ஊர் திரும்பிய பெண்களின் வீட்டுச் சூழலில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் பிரசன்னமாகியுள்ளதுடன் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் சுகாதார பரிசோதகர் அபிராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பகுதி அபாய பகுதியாக இதுவரை இனங்காணப்படவில்லை என்றும் சுகாதார பரிசோதகர் அபிராஜ் தெரிவித்தள்ளதுடன் மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டளளதாகவும்  தெரிவித்துள்ளார்.

Related posts: