யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் நியமனம்!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன் ,சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் ,யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் விரைவில் யாழ்ப்பாணத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
Related posts:
குடாநாட்டின் அபிவிருத்தி குறித்து ஆராய்வு!
சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணம் செலுத்தியது.!
தேர்தல் ஆணையாளர் வேட்பாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|