யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கமரா !

wireless-camera-system-palm-beach-florida Wednesday, January 11th, 2017

குடாநாட்டில் குற்றச் செயல்கள் மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப் படவுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்.மாவட்டச் செயலகத்தில்  நடைபெற்ற மாவட்டச் சிவில் பாதுகாப்புக்குழுக் கூடத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்டது. அந்தவகையில் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்.வணிகர் சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரம் கருத்து தெரிவிக்கும் போது..

வீதிப் போக்குவரத்து கடமையில் உள்ள பொலிஸார் பொது மக்களை மதிப்பது இல்லை. குறிப்பாக வீதி ஓரமாக ஒழித்து நின்றுவிட்டு திருடர்களை மடக்கிப் பிடிப்பதைப் போல் திடீரென வீதிக்கு ஓடி வந்து வாகனங்களை மறிக்கின்றார்கள்.

மேலும் இரவு வேளைகளில் வீதியின் இரண்டு பக்கமும் நிற்கும் பொலிஸார் வாகனங்களையும், மோட்டார் சைக்கிளில் செல்வபர்களை கண்டதும் சாரதியின் முகத்திற்கு ரோச் லைட் அடித்து மறிக்கின்றார்கள்.

பொலிஸார் வாகனங்களை நிறுத்துவதற்காக அவர்களுக்கு சமிஞ்சை விளக்குகள் வழங்கப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் வேண்டுமென்றே செய்வது போல் ரோச் லைட்டை முகத்திற்கு அடிக்கின்றார்கள்.

இதுமட்டுமல்லாமல் ஏ-9 வீதியின் கடமையாற்றும் பொலிஸார் திடீரென வாகனங்களுக்கு முன் சென்று வேக கணிப்பு கருவியை நீட்டுகின்றார்கள். வேறு வாகனத்தின் வேகக் கணிப்பினை அவர்களுக்கு காண்பித்து வழக்குப் பதிவு செய்யப் போவதாக கூறுகின்றார்கள்.

பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் பொலிஸாருடைய இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக சாதாரணமாக அவதானித்தாலே கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கின்றது என்று முறையிட்டிருந்தார்.

இதேவேளை இதற்குப் பதிலளித்த யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸார் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தவே இவ்வாறான கடமைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இருப்பினும் முகங்களுக்கு ரோச் லைட் அடித்து மறிப்பதை நிறுத்துமாறு சகல பொலிஸாருக்கும் அறிவித்தல் கொடுக்கப்படும்.

இனிவரும் நாட்களில் சிவப்பு சமிஞ்சை விளக்குகளைக் கொண்டே பொலிஸார் வாகனங்களை மறித்து சோதணை இடுவார்கள்.

மேலும் வீதி விபத்துக்கள் மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படும். அக் கமராக்கள் ஊடக வீதியில் சட்டத்தை மீறுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என மேலும் தெரிவித்தார்

wireless-camera-system-palm-beach-florida


போக்குவரத்துச் சேவையை இலகுபடுத்திய டக்ளஸ் தேவானந்தாவுக்கு நயினை பக்தர்கள் நன்றி தெரிவிப்பு!
சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஜனாதிபதி உத்தரவாதம் : கல்வி நடவடிக்கைகளுக்கு செல்ல சிங்கள மாணவர்கள...
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத் தேர்த் திருவிழாவிற்குச் சென்ற சமயம் வீடுடைத்துத் திருட்டு!
இந்து சமுத்திரத்தில் சுதந்திர கடற்போக்குவரத்து மாநாட்டுக்கு தயார் - பிரதமர்!
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாகக் காலவரையற்ற போராட்டத்தில் குதிப்பு!