யாழ்ப்பாணத்தின் பரபல பெண் ஊடகவியலாளர் சுமித்திக்கு மர்ம நபர் அச்சுறுத்தல்!

Saturday, September 29th, 2018

யாழ்ப்பாணத்தின் பிரபல பெண் சுயாதீன ஊடகவியலாளரான சுமித்தி தங்கராசாவுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் சென்று கொண்டிருந்த குறித்த பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அவரை கொலை செய்யும் நோக்குடன் விபத்துக்குள்ளாகிய ஒருவர் அவரை அச்சுறுத்திவிட்டு  சென்றுள்ளார்.  குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சுமித்தி தங்கராஜாவிடம் கேட்டபோது –

யாழ்ப்பாணம் புங்கங்குளம் பகுதியைச் சேர்ந்த  33 வயதுடைய சுயாதீன ஊடகவியலாளரான சுமித்தி தங்கராசா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் “நாயன்மார்கட்டு பிள்ளையார் கோவிலுக்கு வழிபாட்டுக்குச் செல்வது வழமை என்று தெரிவித்ததுடன் சம்பவத்தன்றும் வழமைபோன்று அங்கு வழிபாடு முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போதே   குறித்த இனந்தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தெரிவித்தார்.

மேலும் குறித்த மர்ம நபர் என்னை மோத வருகிறார் என்று எண்ணி வீதியைவிட்டு விலகிச் சென்றேன். எனினும் என்னை இலக்கு வைத்து வந்து மோதிவிட்டு, அச்சுறுத்தும் வகையில் பேசிவிட்டு அவர் தப்பித்தார். நிலை தடுமாறி விபத்துக்குள்ளானேன். உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்தேன்.

இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்த அவர் இது ஒரு திட்டமிட்ட ரீதியில் தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலே என்றும் அவர் தெரிவித்தார்

Related posts: