யாழ்ப்பாணத்தின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு – ஆபத்தான நிலைமை இல்லை என்கிறார் மருத்துவர் சத்தியமூர்த்தி!

Thursday, April 16th, 2020

பலாலி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து கடந்த இரண்டு நாள்களில் கொரோனா பரிசோதனைகளின்போது உறுதிசெய்யப்பட்ட 10 பேருடன் யாழ்ப்பாணத்தின் கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே பலாலியில் தனிமைப்படுத்தப்பட்ட 20 பேரில் 4 பேர் தான் இன்னமும் கொரோனோ தொற்று உறுதியாகமல் உள்ளனர்.

மதபோதகருடன் நெருங்கி பழகியவர்கள் என தனிமைப்படுத்தப்பட்ட 20 பேரில் 1ஆம் , 2ஆம் திகதி பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

அன்றைய பரிசோதனையில் தொற்று இனங்காணப்படாத ஏனைய 14 பேரையும் 14ஆம் திகதி இரண்டாம் கட்டமாக பரிசோதித்த போது 8 பேருக்கு குறித்த நோயின் தொற்று உறுதியானது.

எனினும் எஞ்சிய 6 பேருக்கு தொற்று இல்லையென கூறப்பட்ட நிலையில் இன்று 15ஆம் திகதி மேலும் பரிசோதிக்கப்பட்ட போது மேலும் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய மூவருக்கும் நாளையதினம் மூன்றாம் கட்டமாக பரிசோதிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தின் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதற்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதுடன் இந்நோயை முழுமையாக கட்டுப்படுத்த பொதுமக்களும் சமூக இடைவெளியை வலுவாக பின்பற்றுவதுடன் அரவு வழங்கும் பாதுகாப்பு முறைமைகளையும் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

Related posts: