யாழ்ப்பாணக் குடாநாட்டில் நடப்பாண்டிலும் 190 வீடுகள் – தேசிய வீடமைப்பு அதிகார சபை!

Tuesday, February 20th, 2018

இந்த வருடம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 190 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொன்றும்ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இந்த வீடுகள் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

வீட்டுக்கான பயனாளி தெரிவுகள் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் நடைபெறவுள்ளன என வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஊர்காவற்றுறை, தென்மராட்சி, சங்கானை, உடுவில் ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன. வீட்டுக்காக எந்தக்கொடுப்பனவையும் பயனாளிகள் வழங்கத் தேவையில்லை. அந்த வகையில் சாவகச்சேரிபிரதேச செயலகப் பிரிவில் வரணி கிராமத்தில் 10 வீடுகளும், மந்துவில்கிராமத்தில் 20 வீடுகளுமாக 30 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவில் அராலி மத்தி, சங்கரத்தை, அராலி தெற்குஆகிய மூன்று கிராமங்களிலும் 100 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஊர்காவற்றுறைப் பிரதேச செயலக பிரிவில் மெலிஞ்சிமுனை கிராமத்தில் 30 வீடுகள்நிர்மாணிக்கப்படவுள்ளன. உடுவில் பிரதேச செயலக பிரிவில் ஈவினை, பொக்கனை ஆகிய கிராமங்களில் 30 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றார்.

Related posts: