யாழில் 40 பேர் வேட்புமனு தாக்கல்!

Sunday, December 4th, 2016

இளைஞர்பாராளுமன்ற வேலைத் திட்டத்தின் மூலம் 160 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும்-18ம் திகதி நாடுபூராகவும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பத்துத் தேர்தல் தொகுதிகளிலும்உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் நேற்று வெள்ளிக்கிழமை(12) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-12.30மணி வரை மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் நடைபெற்றுநிறைவடைந்துள்ளது.

இதற்கமைவாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் 40 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்களில் 32வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் 8 வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களில் தங்கள் தேர்தல் பிரசாரத்தினைஎதிர்வரும்-16ம் திகதி இரவு வரை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களிலிருந்து 10 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்எதிர்வரும்-18ம் திகதி இடம்பெறும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படுவர் எனத் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்ப்பாண மாவட்டக் காரியாலய உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கையின் இளைஞர், யுவதிகளை தேசிய தலைமைத்துவத்தின் உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டு இத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: