யாழில் வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் பேரணி!

Wednesday, April 5th, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை(05) யாழில் மாபெரும் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.  யாழ். பல்கலைக்கழக முன்றலில் இன்று காலை-10 மணிக்கு ஆரம்பமாகிய பேரணி பிற்பகல் 12.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது.
இந்தப் பேரணியில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் ‘பச்சை வாளிகள் உள்ளே….பட்டதாரிகள் றோட்டிலே…!’, ‘பட்டதாரிகளுக்கு வேலை இல்லை எனில் பல்கலைக் கழகத்தை இழுத்து மூடு’, ‘அரசியல் வாதிகள் ஏசியில் நாங்கள் வீதியில்….’  உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன், மத்திய மாகாண அரசாங்கங்களைக் கண்டிக்கும் வகையில் பல்வேறு பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

Related posts: