யாழில் வீடொன்றில் பெருமளவு போதைப்பொருள்கள் மீட்பு!

Thursday, June 13th, 2019

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வீடொன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பாக்குப் பொதிகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற யாழ் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,

நாவந்துறைப் பகுதியில் உள்ள முஸ்லிம் குடும்பம் வசிக்கும் வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள் பாக்கு என்பன பாடசாலை மாணவர்களுக்கு விற்கும் நோக்குடன் பொதியிடப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.

அத்துடன், குறித்த வீட்டில் வசிப்பவர் யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களுக்கு போதை கலந்த பாக்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுள்ளது.

இதேவேளை குறித்த நபர்களிற்கு எதிராக ஏற்கனவே யாழ் நீதிமன்றத்தில் இதே குற்றச்சாட்டுடன் வழக்கும் உள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சான்றுப்பொருள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: