யாழில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!

Saturday, March 9th, 2019

துவிச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் கச்சாய் வீதியில் நேற்று மதியம் குறித்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, கச்சாய் கொடிகாமத்தைச் சேர்ந்த 19 இளைஞன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இன்னொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related posts: