யாழில் வன்முறைகளுடன் தொடர்புடைய பலர் தலைமறைவு!

Saturday, July 21st, 2018

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள பலர் தலைமறைவாகி உள்ளதாக வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் யாழ்ப்பாண காவற்துறை பிரதேசத்துக்கு உட்பட்ட காவற்துறை அலுவலர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் 2 முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும், வடக்கிற்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts: