யாழில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் – இலங்கையின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 870 ஆக உயர்வு!

Wednesday, July 21st, 2021

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரே நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் நேற்றுவரையான காலப்பகுதியி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான மேலும் 43 பேர் இலங்கையில் உயிரிழந் துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகள் நேற்றுமுன்தினம் நிகழ்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்த 870 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 511 பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது

.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 87 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 980 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 62 ஆயிரத்து 828 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: