யாழில் முதன்முறையாக நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம்!

யாழ். பண்ணையிலுள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரத்தின் செயற்பாடுகள் இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளதாக யாழ். மாவட்ட காச நோய் தடுப்பு வைத்திய அதிகாரி யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தினால் 160 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த இயந்திரம் யாழ். காசநோய் தடுப்பு பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நோயாளர்கள் இலவசமாக சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும். நோயாளர் பரிசோதிக்கப்படும் போது மருத்துவர் நேரடியாக அவற்றை அவதானிக்க முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக இவ்வியந்திரம் பொருத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பலஸ்தீனம் இலங்கை இடையே மருந்துவ உடன்படிக்கை!
மீண்டும் நாட்டை மூடுவதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்...
எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எது...
|
|