யாழில் முடக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் இரு வாரங்களின் பின்னரே முடிவெடுக்கப்படும் – மாகாண சுகாதார பணிப்பாளர்!
Saturday, April 17th, 2021யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ள திரையரங்குகள், திருமண மண்டபங்களை முடக்கலில் இருந்து விடுவிப்பதா இல்லையா என்பதை 2 வாரங்களின் பின்பே தீர்மானிக்க முடியும் என வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
மாவட்டத்தில் திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பொது நிகழ்வுகள், திருநெல்வேலி பாரதிபுரம் கிராமம் ஆகியன முடக்கட்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் திங்கள் கிழமை தொடக்கம் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திருமண மண்டபங்கள், திரையரங்குகள் தெரடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய பாரதிபுரம் கிராமமும் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும். அவற்றை முடக்கலில் இருந்து நீக்குவதா இல்லையா என்பதை அடுத்த இரு வாரங்களின் பின்பே தீர்மானிக்க உள்ளதாகவும் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|