யாழில் மழை: மக்கள் மகிழ்ச்சி!

Monday, March 28th, 2016

கடந்த சில நாட்களாக கடும்  வெப்பநிலையால் அவதியுற்ற யாழ்ப்பாணத்தின் சிலபகுதிகளில் இன்று மழை  பெய்து வருகின்றது.

இன்று  முற்பகல் யாழ்  நகர் பகுதி மற்றும் வலிகாமம் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது

குடாநாட்டில் கடந்த சில நாட்களாக அதிகளவான வெப்பநிலை காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில் இன்று திடீரென மழை பெய்து வருகின்றது. இதனால் மக்கள் பெரும் மகிழ்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்துவரும் கடும் வெப்பத்தின்  கொடுமையை தாங்க முடியாது நேற்றைய தினம் முதியவர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

3

2

1

Related posts: