யாழில் போலி நாயணத்தாள்களை அச்சிட்டவர்கள் கைது!

Tuesday, November 7th, 2017

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட கணவன் மற்றும் மனைவியையும் பொலிஸாரால் தைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – நெளுக்குளம் பகுதியில் உள்ள வீட்டினை, நேற்றிரவு சுற்றிவளைத்த போது, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

இதன்போது, நாணயத்தாள்களை அச்சிட்ட 2 அச்சி இயந்திரங்கள், ஸ்கேனர் இயந்திரம், மடிக்கணினி, 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் 400 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் 148 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர்கள் போலி நாணயங்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் முன்னரும் தேடப்பட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: