யாழில் போக்குவரத்து பொலிசார் காலால் உதைந்து பிரதீபன் பலி விவகாரம் – கண்ணால் நேரில் கண்ட சாட்சி பரபரப்பு வாக்குமூலம்!

Wednesday, July 10th, 2024

கடந்த மே மாதம் பத்தாம் தேதி  யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் புன்னாலை கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் செல்வநாயகம் பிரதீபன் வயது 41, என்ற பிரஸ்தாப நபர் உயிரிழக்க போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடு காரணம் என, இவற்றை நேரில் கண்ட பிரதான சாட்சி இரண்டு மாதங்களின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

இவ்வளவு காலமும் அவர் சாட்சி வழங்குவதற்கு பயந்த நிலையில் தானாக முன் வந்து சாட்சி வழங்க வேண்டும் என்றும் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்றும் இந்த சம்பவம் போல் இனிவரும் காலத்தில் யாருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காக தான் வாக்கு மூலம் வழங்க வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்  யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் ஊடாக முச்சக்கர வண்டியில் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது, வீதியின் வலது பக்கம் நின்ற போலீசு உத்தியோகத்தர்கள் மூவர் இடது பக்கமாக பயணித்த சிலரை மறித்து சோதனை மேற்கொண்டிருந்தனர். உயிரிழந்த பிரஸ்தாவின் அவரையும் போலீச மறித்த பொழுது அவர் நிற்காமல் சென்றுள்ளார்.

கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்து பின்னால் துரத்திச் சென்று, வடக்கு புன்னாலைகட்டுவேன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் பின்னால் இருந்த போக்குவரத்து உத்தியோகத்தர் வலது காலால் உதைத்தார், இதன் போது அந்த நபர் நிலை தடுமாறு வீதியின் மத்திய பகுதிக்கு சென்றிருந்தார்.

பின்னர் மீண்டும் துரத்திச் சென்ற பொலிசார் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உதைத்த பொழுது, அந்த நபர் நிலை தடுமாறி அருகில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி குற்றுயிராக இருந்தார்.

அவரை எடுத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்க நாங்கள் முயற்சி செய்த பொழுதும் அவரை உதைந்து விழுத்திய பலாலி போக்குவரத்து பொலிசார் அனுமதிக்கவில்லை எனவும், அவரை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என அவர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: