யாழில் பொலிஸார் சுற்றிவளைப்பு : 22 பேர் கைது!

Tuesday, August 7th, 2018

தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல், மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களில் நேற்று(06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இயங்குகின்ற குழுக்களுடன் குறைந்த வயதுடையவர்கள் இணைந்து கொள்வதாகவும், அவ்வாறான குழுக்களை அடக்குவதற்காக கடந்த 01ஆம் திகதி முதல் விஷேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சாரதித்துவ தவறுகளுக்கு 10 வருட சிறையுடன் 50000 ரூபா தண்டம்  அறவிட தீர்மானம்!
சத்துணவு வழங்கும் திட்டம் யாழில் ஆரம்பிக்கப்படும் - அரச அதிபர் வேதநாயகன் தெரிவிப்பு!
741 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவில்லை - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்!
துயர் பகிர்கின்றோம்!
ரயில் நிலையங்களை பசுமை மயமாக அமைக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் சி.பி.ரட்நாயக்க!