யாழில் பெண் ஊழியர் உட்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Sunday, April 11th, 2021

யாழ்.மாவட்டத்தில 19 பேர் உட்பட வடக்கில் 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி கிளிநொச்சி வைத்தியசாலையில் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் யாழ்.கரவெட்டியில் தொற்றாளருடன் தொடர்பில் இருந்த 4 பேர், யாழ்.நகரில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பெண் ஊழியர் ஒருவர் உட்பட 5 பேருக்கும், உடுவில் பகுதியில் தொற்றாளருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும், சிறைச்சாலையில் 4 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கும்,

சங்கானை பகுதியில் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Related posts: