யாழில் புகையிரதத்துடன் மோதுண்டு வர்த்தகர் படுகாயம்!

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று நண்பகல் பயணித்த புகையிரதம் கந்தர்மடம், இந்து மகளிர் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட காரை மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த இந்த விபத்தில் காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தர்மடம், இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிரே வந்த புகையிரதம் காரை மோதி கந்தர்மடம் அரசடி வீதி வரை இழுத்துச் சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கார் முற்று முழுதாக சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ். வர்த்தகரான பாலா என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
நிதி நகர்த் திட்டம் கைவிடப்பட மாட்டாது - அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
நாடாளுமன்ற அமைதியின்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு புதன்கிழமை கூடவுள்ளது!
அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை பரீட்சையை ஒத்திவையுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உயர்தர மாணவர்கள்...
|
|