யாழில் பால் புரைக்கேறியதால் இரண்டு மாத ஆண் குழந்தை பலி!

Thursday, January 18th, 2018

யாழ்ப்பாணத்தில் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பால் புரக்கேறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமானது பலரைவேதனைக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் யாழ்.வீதியை சேர்ந்த தெய்வேந்திரம் சஞ்சி என்ற இரண்டு மாதங்களான ஆண் குழந்தையே மேற்படி உயிரிழந்துள்ளது.

அதிகாலை 2 மணிக்கு குழந்தையின் தாயார் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு குழந்தையை உறங்க செய்த பின்னர் தானும் உறங்கியுள்ளார். காலை7 மணிக்கு குழந்தையை எழுப்ப சென்ற போது பேச்சு மூச்சின்றி மூக்கினால் பால் வழிந்தபடி கிடந்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலைக்குஉடனடியாக கொண்டு சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் மேற்கொண்டிருந்தார்.

Related posts: