யாழில் தனுரொக் குழு உறுப்பினர் வீட்டில் ஆவா குழு : 15 வயது சிறுமி வைத்தியசாலையில்!

Wednesday, July 4th, 2018

தெல்லிப்பழையில் வீடு ஒன்றுக்குள் புகுந்து ஆவா குழுவினர் நடத்திய தாக்குதலில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக வடமாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவினரால் மற்றுமொரு குழுவான தனுரொக் குழுவின் உறுப்பினர் ஒருவருடைய வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலக்காகி அவ்வீட்டிலுள்ள 15 வயதுச் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலை 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts: