யாழில் சீரற்ற வானிலை காரணமாக 5,908 குடும்பங்கள் பாதிப்பு!

Wednesday, November 10th, 2021

யாழ்ப்பாண மாவட்டத்தில் 5,908 குடும்பங்களைச் சேர்ந்த 19,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகளவிலான பாதிப்பு பதிவாகியுள்ளது.

சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்த 131 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்

Related posts: