யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!

Wednesday, April 20th, 2016

இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டில் யாழ்.இந்து கல்லூரியை அண்மித்துள்ள கில்னர் வீதியியைச்சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

எஸ்.சிவலிங்கம் என்பவரும் அவருடைய மனைவி சி.நிலந்தினியும் யாழ்.நகரில் உள்ள தமது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு இரவு 8 மணி யளவில் வீடு திரும்பி க்கொண்டிருந்த நிலையில், ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர்கள் மீது வாளால் வெட்டியுள்ளனர்.

இதன்போது கணவன் சிவலிங்கம் கையிலும், நெஞ்சிலும் படுகாயமடைந்துள்ளார்.மனைவி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் மனைவி காயமடையவில்லை.

மேலும் நேற்று இரவு நடைபெற்ற சம்பவத்தை போன்று குறித்த சிவலிங்கம் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரும் இரு தடவை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மனைவியாயிடம் இருந்த பணப்பை தாக்குதல் நடத்தியவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எனினும் அதில் 3 ஆயிரம் ரூபாய் பணமே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

Related posts: