யாழில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்!

Friday, January 25th, 2019

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம்  சுவீரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று(25) பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததை தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்தப் பகுதியில் உள்ள 3000 ஏக்கர் காணி அதாவது 300 பரப்புக் காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் காணி சுவீகரிப்பு நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத காணியை சுவீரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுவீகரிப்பு நோட்டிஸில் குறிப்பிடப்பட்டுள்ளமையினால், காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, காணி சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் யாரும் உரிமை கோர முடியாது என்றும் அந்தப் பகுதியில் உள்ள 89 பரப்பு காணி உரிமையாளரை பிரதேச செயலாளர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அச்சுறுத்தல்களை மீறியும் காணி உரிமையாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து காணி சுவீகரிப்புத் தொடர்பாக தெரிவித்த பின்னரும், பிரதேச செயலாளர் மிரட்டும் தொனியில் அப்பகுதி மக்களுடன் காணி சுவீகரிப்போம். சுவீகரிப்பில் தலையிடக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த வருடம் நீதிமன்றினால் எழுப்பப்பட்ட மக்களுக்கு அப்பகுதியில் காணி வழங்குவதாக கூறியும் இதுவரை காணி வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியதுடன், காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் மீறி சுவீகரித்தால், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து தடுப்போம் என்றும், கூறியதை தொடர்ந்து, அப்பகுதி கிராம சேவையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள், காணி அளப்பதை நிறுத்திவிட்டு, பிரதேச செயலாளருக்கு மகஸர் ஒன்றினைத் தருமாறும், அந்த மகஜரில் காணி சுவீகரிப்பை எதிர்த்தவர்கள் தமது கையொப்பமிட்டும் கொடுத்தனர்.

IMG_9057

IMG_9081

IMG_9097

 

Related posts: