யாழில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து!

Wednesday, August 2nd, 2017

யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவுக்கமையவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் திருவிழாவையும் முன்னிட்டே பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் பொலிஸ்மா அதிபர் நேற்றைய தினம் யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அங்குள்ள பாதுகாப்பு நிலமைகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: