யாழில் கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் பாதிப்பு – யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, November 26th, 2020

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை  மற்றும் காற்றின் தாக்கத்தின் காரணமாக 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்.மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்க பெற்றிருகின்றது. எனினும் இதுவரையில் சூறாவளி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவினையும் உள்ளடக்கியதாக 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: