யாழில் கடந்த 23 நாட்களில் 72 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Tuesday, August 24th, 2021

யாழில் இம்மாதம் முதலாம் திகதிமுதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் 72 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்ட செயலகத்தின் கொரோனா புள்ளிவிபர அறிக்கையில் இந்த விடயம் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் இதுவரையிலான காலபகுதியில் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிலையே அதிகளவான மரணங்களாக 43 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: