யாழில் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா செலவில் அங்காடி விற்பனைக் கூடம்!

Friday, December 9th, 2016

 

 

யாழ். மாநகர சபையால் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மாநகர சபையின் வளாகத்தில் ஒரு கோடியே  முப்பது இலட்சம் ரூபா செலவில் அங்காடி விற்பனைக் கூடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறித்த அங்காடிக் கூடங்கள் அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தப் பகுதியில் நடைபாதை வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டுச் செயற்பட்டு வரும் நிலையில் இந்த நடைபாதை வியாபார நிலையங்களைப் புதிதாக அமைக்கப்படவுள்ள அங்காடி விற்பனை கூடத்திற்கு மாற்றவும் ஆலோசிக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Jaffna-town

Related posts: