யாழில் இருந்து சென்ற தொடருந்துடன் பேருந்து மோதி கோர விபத்து!

Saturday, May 11th, 2019

பளை – கொடிகாமம் பகுதியில் இன்றுகாலை தொடருந்துடன் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்தின் சாரதி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடனேயே கொடிகாமம் நோக்கி சென்ற குறித்த சிறிய ரக பயணிகள் பேருந்து மோதியுள்ளது.

எனினும் சம்பவம் இடம்பெற்ற போது பேருந்தில் பயணிகள் யாரும் இருக்கவில்லை என தெரியவருகிறது.

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக உத்தர தேவி சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், வடக்கு தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: