யாழில் இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு!

Sunday, July 23rd, 2017

கொடிகாமம் – வரணி பகுதியில் இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்களால் வாள் வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் வரணி பகுதியிலுள்ள முள்ளி எனும் இடத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், வாள்வெட்டிற்கு இலக்கான இராணுவத்தினர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, பருத்தித்துறை, குடத்தனைப் பகுதியில் நேற்றைய தினம் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட சிலரால் கடற்படையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பெருமளவில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக் கடைமைகளில் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் வரணிப் பகுதியில் இராணுவத்தினர் மீதான வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: