யாழில் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்வதில் மக்கள் ஆர்வம்!

Tuesday, June 29th, 2021

யாழ். மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கும் பணியில் மாலை வரை 9 ஆயிரத்து 988 பேர் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் யாழ். மாவட்டத்திற்கு கடந்த மே மாத இறுதியில் கிடைக்கப்பெற்றன.

இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன.

அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸை பெற்ற பொதுமக்களுக்கு இரண்டாவது டோஸை வழங்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதிவரை இரண்டாவது டோஸ் வழங்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்நாள் மாலை வரை 9 ஆயிரத்து 988 பேர் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: