யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

Thursday, July 11th, 2019

யாழ்ப்பாணம், சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அயலில் உள்ளவர்கள் குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் சடலம் காணப்படுவதை கண்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலதி எனும் 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: