யாழில் அதிவேகத் தபால் சேவைகள் சிறப்புற நடக்கின்றன் – தலைமைத் தபாலகம்!

யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட அதிவேகத் தபால்சேவை தற்போது முன்னேற்றகரமாக நடைபெற்று வருகின்றது என்று யாழ்பப்hணத் தலைமைத் தபாலக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
தபாலத் தொடர்புகள் அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி அதிவேகத் தபால் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி அதிவேக தபால் சேவைகள் தற்போது வெற்றிகரமான முறையில் செயற்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது இடம்பெற்றுவரும் இந்தச் சேவையை பரவலாக்கம் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தலைமைத் தபாலக வட்டாரத்தில் இருந்து மேலும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அதிர்ச்சித் தக...
நடுத்தர ஆடைத் தொழில்துறை அபிவிருத்திக்கு அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ புதிய முயற்சி!
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
|
|