யாழிலிருந்து வவுனியா செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு !
Monday, March 29th, 2021யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழ்ப்பாணத்திலிருந்து யாழ் மாவட்டத்திலிருந்து வவுனியா நோக்கி பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து, வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், பாதுகாப்பு கருதி அங்கிருந்து வவுனியாவுக்கு வருகைதரும் பயணிகளிடத்தில் குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரயிலுடன் மோதுண்ட கெப் வண்டி – மயிரிழையில் உயர் தப்பிய சாரதி!
வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் - சுற்றாடல் அமைச்சு கோரிக்கை!
நாடு வழமைக்கு திரும்பும்வரை சகல மதுபான சாலைகளையும் பூட்டுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத...
|
|