யாழிலிருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரதங்கள் இரத்து – பயணிகள் அவதி!

மதவாச்சி மற்றும் பரசன்கஸ்வெவவுக்கும் இடையில் ரஜரட்ட ருஜினி கடுகதி புகையிரதம் தடம்புரண்டுள்ளமை காரணம் வடக்குக்காக புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதனால் வடக்கு புகையிரத பாதையில் கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் புகையிரதங்கள் அநுராதபுரம் வரையும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் புகையிரதங்கள் மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்திலிருந்து அனைத்து புகையிரதங்களும் சேவையை மேற்கொள்ளாது எனவும் மாலை தபால் புகையிரத சேவை மட்டும் இரவு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரும் புகையிரதம் அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்த பயணிகள் பேருந்து மூலம் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|