யாழிலிருந்து இந்தியப் பிரதமருக்கு இந்து அமைப்புக்கள் கடிதம்!

Thursday, July 25th, 2019

இலங்கையில் இந்துக்கள் பெரும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களும், வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு யாழிலுள்ள இந்து அமைப்புக்கள் கூட்டாக கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

சில தினங்களின் முன்னர் யாழிலுள்ள இந்து அமைப்புக்கள், மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஒன்றாக சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்பின்னர், அனைவரும் யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்திற்கு சென்று, துணைத்தூதரை சந்தித்து பேசினர்.

இதன்போது, துணை தூதரின் ஆலோசனையின் பேரில், நரேந்திர மோடிக்கு மேற்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் திருக்கேதீச்சரம், கன்னியா, நீராவியடி பிள்ளையார் ஆலயங்களில் இந்துக்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

பேக்கரி உற்பத்திகளுக்கான பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை - வர்த்தக அமைச்சர் அறி...
வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல் - பத்து இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீத...
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அதிகூடிய வெப்பநிலை - எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென ...