யாழின் பல பகுதிகளில் இன்று மின்தடை !

Sunday, September 24th, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.  மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ். மாவட்டத்தில் மானிப்பாய், மானிப்பாய் வைத்தியசாலை, மானிப்பாய் கார்கில்ஸ் பூட் சிற்றி, உடுவில் தெற்கு ஆனைக்கோட்டை, கொல்லங்கலட்டி, மாவை கலட்டி, ஆஸ்பத்திரி வீதி, காரைநகர் சந்தியிலிருந்து கே.கே.எஸ். வீதிச் சந்தி வரை, சீனி வாசகம் வீதி, சிவன் பண்ணை வீதியின் ஒரு பகுதி, கே.கே.எஸ். வீதியின் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து சத்திரத்துச் சந்தி வரை, சப்பல் வீதி, யாழ். 1 ஆம், 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்களின்  வேம்படிச் சந்தி வரை,   பிரதான வீதி துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து விஜிதா கபே வரை, யாழ். பொலிஸ் நிலையம், இலங்கை தொலைத் தொடர்பு நிலையம், யாழ். பொதுநூலகம், யாழ். மாவட்ட நீதிமன்றக் கட்டடத் தொகுதி, தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையின் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: