யாழின் சில பகுதிகளில் இன்று மின்தடை !

Saturday, September 9th, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(09)  காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், யாழ். மாவட்டத்தின் மானிப்பாயின் ஒரு பகுதி, நெல்லண்டை, பருத்தித்துறை வெளிச்சவீடு, சிவப்பிரகாசம் வீதி, மூன்றாம் குறுக்குத் தெருப் பிரதேசம், கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, வல்லிபுரம், உபய கதிர்காமம், புனிதநகர், கற்கோவளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts: