யால தேசிய பூங்கா மூடப்படுகிறது!
செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதியவரையிலும் உள்ள 45 நாட்களுக்கு யால தேசிய பூங்கா மூடப்படும் என்றும் வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
யால தேசிய பூங்காவில் வசிக்கின்ற மிருகங்களின் இயற்கை நடத்தையில் எவ்விதமான இடையூறுகள் ஏற்படாத வகையிலும், பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலுமே இந்தப் பூங்கா மூடப்படவிருக்கின்றது.
ஒவ்வொரு வருடங்களிலும் இந்தக்காலப்பகுதியில், யால தேசியப் பூங்காவை தற்காலிகமாக மூடிவிருவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டக்ளஸ் தேவானந்தாவின் அ...
ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த தனியார் வங்கிகள் தீர்மானம்!
மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் இருந்தபோது மின்வெட்டு - சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு என பொதுப...
|
|