யார் கூறினாலும் வடக்கில் இராணுவத்தைக் குறைக்கமுடியாது –
Monday, September 5th, 2016அரசுக்குத் தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே வடக்கில் இராணுவம் குறைக்கப்படு. ஐநா செயலர் சொன்னதற்காக இராணுவக் குறைப்புச் செய்யமுடியாது என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சிலதினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஐ.நா செயலர் பான்கிமூன் வடக்கிலிருந்து இராணுவத்தினரைக் குறைக்கவேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், ஐநா செயலர் சொன்னாலும் வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினரைக் குறைக்கமுடியாது என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், அரசுக்குத் தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே வடக்கில் இராணுவம் குறைக்கப்படுமெனவும், ஐநா செயலர் சொன்னதற்காக இராணுவக் குறைப்புச் செய்யமுடியாது எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்குக் கிழக்கில் பெருமளவான இராணுவக் குறைப்பு நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்த அவர், முழுமையாக நீக்கவேண்டுமென்பதை அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.
எனினும், இலங்கைமீது அழுத்தங்களைப் பிரயோகிக்கப்போவதில்லையென ஐநா செயலர் தெரிவித்துள்ளார் எனவும், இது இலங்கைக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|