யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை சுகாதார அமைச்சே தீர்மானிக்கும்!
Wednesday, January 6th, 2021இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 60வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னிலை பணியாளர்கள் மற்றும் ஏனையவர்களிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தீப கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கை எந்த மருந்தினை பயன்படுத்தவுள்ளது என்பதை பொறுத்து இவர்களில் யாருக்கு முதலில் மருந்தினை வழங்குவது என்பது தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 வீதமான சனத்தொகையினர் இரண்டு கட்டங்களாக மருந்தினை பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கைக்கு கிடைக்கின்ற மருந்தினை பொறுத்து முதலில் யாருக்கு வழங்குவது என்பது தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாருக்கு மிகவும் அவசியம் தேவை என்பதை சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்குவதற்கான வாய்ப்புகள் நிராகரிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|