யானைக்கால் நோய் அற்ற நாடாக இலங்கை பிரகடனம்!
Sunday, July 17th, 2016யானைக்கால் நோய் அற்ற நாடாக இலங்கையை பிரகடனம் செய்யும் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆசிய வலயக் கண்காணிப்பகத்தால் இந்த சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்ன குறிப்பிட்டுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளில் யானைக்கால் நோய் அற்ற நாடு என்ற ரீதியில் இலங்கை, இரண்டாவது இடத்தை பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே மாலைத்தீவு யானைக்கால் அற்ற நாடுகளில் முதலிடத்தில் காணப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டுக்குள் யானைக்கால் நோயை இல்லாதொழிக்கும் நோக்குடன் உலக சுகாதார ஸ்தாபனத்தால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய யானைக்கால் நோயை ஒரு வீதத்திற்கும் குறைவாக பேணுவதற்கு இலங்கை முன்னெடுத்த செயற்பாடுகளால் இந்த சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
தேர்தல் நடத்துவது தொடர்பில் முக்கிய சந்திப்பு!
கொவிட் - 19 A வகையான வைரேஸ் தொற்றே இலங்கையை தாக்கியுள்ளது – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவி...
கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகரிடம்!
|
|
உரிய பகுதிக்கே தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் - தகவல் திணைக்கள பணிப்ப...
உடனடியாக வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டை பெற விண்ணக்குமாறு குடிவரவு மற்ற...
கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக...