சிம் அட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியலில் !

Friday, January 18th, 2019

தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் சிம் அட்டைகளை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்எம்.ஹம்ஸா முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்ப்படுத்திய போதே இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 24 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் திருகோணமலை தொலைத்தொடர்பு நிலையங்களில் வேலை செய்து வந்த நிலையிலே இணையத்தளம் ஊடாக சிம்அட்டைகளை பயன்படுத்தி அரசுக்கான வரிகள் கிடைக்காமல் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையிலே திருகோணமலை தலைமையக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: